காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக ரத யாத்திரை நேற்று துவங்கியது இந்த யாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டு நடந்து செல்கின்றனர். இந்நிலையில் டாக்டர்.அம்பேத்கர் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான கே.வி தங்கபாலு டாக்டர்.அம்பேத்கார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 இதில் மாநில துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் முன்னாள் மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் திருவரம்பூர் வட்டார தலைவர் செந்தில்குமார் குளித்தலை பிரபாகரன் மணப்பாறை வட்ட தலைவர் செல்வர் கிளிக்கூடு சகாதேவன் மாவட்ட பொதுச் செயலாளர் மாலை ஆனந்தன் மாவட்ட ஓபிசி தலைவர் குணசேகரன் முன்னாள் தலைவர் தனபால் கிளிக்கூடு பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published.