எஸ்டிபிஐ கட்சி தெற்கு மாவட்டம் மேற்கு தொகுதி ஆழ்வார்தோப்பு கிளையின் சார்பாக “அரசியலாய் அணி திரள்வோம் அதிகாரத்தை வென்றெடுப்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கிளை ஒருங்கிணைப்பாளர் DR.பக்ருதீன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு தொகுதி தலைவர் தளபதி அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை யாற்றினார் .தொண்டரணியின் மாவட்ட செயலாளர் முகமது ஆரிப் தலைமை உரையாற்றினார். வாழ்த்துரையை திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி வழங்கினார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இமாம் ஹஸ்ஸான் பைஜி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

பொதுக்கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆழ்வார்தோப்பில் அமைய உள்ள சுகாதார நிலையத்தை விரைந்து கட்டித்தர வேண்டும். ஆழ்வார்தோப்பு பஸ் ஸ்டாண்டில் இயங்கிவரும் அங்கன்வாடியை வேற இடத்திற்கு மாற்றி தர வேண்டியும் மேலும் புதிய அங்கன்வாடியை விரைந்து கட்டித் தர வேண்டும் என்று தீர்மானம்.

தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஆழ்வார்தோப்பில் மருத்துவ முகாம்களை அமைத்து குழந்தைகளையும் பெரியவர்களையும் காத்திட வேண்டும். ஆழ்வார்தோப்பு – பீமநகரை இணைக்கும் ஆற்று பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும், இறுதியாக கிளை தொண்டரணி தலைவர் சுஹைல்  நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *