திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான பிரிவு பிரத்யேகமாக வெளி நோயாளிகளுக்காக இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரிவை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் ஜே.ஜெகன்மோகன் மற்றும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துணைத் தலைவர் ஜி. கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் பங்கேற்ற காவேரி மருத்துவமனை குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர் செங்குட்டுவன் பேசும்போது ,இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டிருக்கும் வெளிநோயாளிகளுக்கான இந்த புதிய சிகிச்சை பிரிவு திருச்சி மாநகரில் தனியார் துறையில் நிறுவப்பட்டிருக்கும் முழுமையான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைகளில் ஒன்றாகும். ஓராண்டில் ஐந்தாயிரம் முதல் 7000 நோயாளிகளுக்கும் அதிகமாக வெளிநோயாளிகள் இந்த பிரிவில் சிகிச்சை பெறுகிறார்கள். கை அறுவை சிகிச்சை, நரம்பு பின்னல், புறவழி நரம்பு காயங்கள், தீக்காயங்கள், தீக்காயத்திற்கு பிந்தைய சிகிச்சை, பராமரிப்பு அன்னப் பிளவு போன்ற பல்வேறு அறுவை சிகிச்சை அம்சங்களுடன் இந்த பிரிவு துணை சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

திருச்சி காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ். கந்தா பேசும்போது, காவேரி மருத்துவமனையில் ஓராண்டில் 3500 க்கு அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறோம் மருத்துவ வரலாற்றில் வயதில் மிக இளைய நபருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை என மதிப்பிடப்பட்டிற்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்கு பாத உறுப்பு பதியம் உட்பட பல தனித்துவமான சாதனை சிகிச்சைகளை இப்பிரிவு செய்திருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்