திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கை, பல்கேரியா, தென் கொரியா, ரஷியா, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விசாரணைக் கைதிகளாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 1946 இன் கீழ் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், பலருக்கு விசாரணை முடிந்தும் விடுவிக்கப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டங்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி சிறப்பு முகாமில் விசாரணை கைதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 60க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

 அதனைத் தொடர்ந்து 153 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பறிமுதல் செய்த செல்போன்களை திரும்பி வழங்க வேண்டும் என கூறி 20க்கும் மேற்பட் கைதிகள் சிறப்பு முகாமில் உள்ள மரத்தில் ஏறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரத்தின் மீது ஏறி “எங்களைக் காப்பாற்றுங்கள்” ”HELPUS” என்ற வார்த்தைகள் எழுதிய பதகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்குகள் முடிந்தும் தண்டனை பெரும் நிலை எங்களை காப்பாற்றுங்கள் என்ற பதாகையும் இடம் பெற்று இருந்தது. கீழே இரங்கமாட்டோம் என்ற முழக்கத்துடன் மரத்தின் உச்சி வரை ஏறி போராட்டத்தில் ஈடுபடும் அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *