திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் .
அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 2024ல் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் (பொது மற்றும் தொழிற்கல்விப் பிரிவுகளில்) முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தங்க பதக்கம் மற்றும் ரூ.500/- ரொக்க தொகையும்,
இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.500/- ரொக்கத் தொகையும், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்கள். முன்னதாக திருச்சி சேவா சங்க செயலர் சரஸ்வதி வரவேற்புரையாற்றிட, பள்ளித் தலைமையாசிரியர் நாகம்மை, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது,