தமிழகத்தில் இருக்கக்கூடிய 15 சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்து மாநில அளவில் ஒதுக்கி தந்திருக்கிறார் இதில் வெற்றி பெறுகின்ற 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளில் நடக்கின்ற போட்டிகளில் பங்கேற்க 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைச்சாலைகளில் பணிபுரிய கூடிய பெண் காவலர்கள் பணி சுமைக்கு ஆளாக மாட்டார்கள். அவர்கள் விடுப்பு தேவைப்படும் பொழுது எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க கோரி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலை பாதுகாக்கப்பட்ட சிறையாக இருப்பதற்கு 100 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கிடு செய்துள்ளது. தற்போது உள்ள இடத்தில் சிறையை வைத்துக் கொள்வதா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா என்பது பற்றி தமிழக அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. எந்த முடிவும் எடுக்கவில்லை. திருச்சி மாவட்டத்தில் 292 ஏக்கரில் புதிய சிறைச்சாலையை உருவாக்கிக் கொள்ள இடம் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருச்சி சிறை மாற்றுவதற்கான எந்த முடிவும் தற்போது வரை முடிவு எடுக்கவில்லை

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை பெண்கள் சிறையாக மாற்றப்படுமா என்ற செய்தியாளர் கேள்விக்கு அங்கு போதிய வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை. புதிய சிறைச்சாலைகள் உருவாக்கப்படுமானால் அங்கேயே திருச்சி மத்திய சிறையுடன் பெண்கள் சிறையை மாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சரிடம் பரிசீலனையில் உள்ளது. நிச்சயமாக எந்த முடிவாக இருந்தாலும், சிறையில் இருக்கக் கூடியவர்கள் நன்மையை மற்றும் பாதுகாப்பு கருதி தான் இருக்கும். எந்தவித பாதிப்பும் இருக்காது என கூறினார். மேலும் மத்திய சிறை என்பது உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறப்பு முகாம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் மத்திய சிறைக்கும் சிறப்பு முகாம் சிறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனாலும் மாவட்ட ஆட்சியர் அதற்கு பொறுப்பு உள்ளவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *