திருச்சி திண்டுக்கல் சாலை இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கபடி போட்டிற்கு விகாஸ் கல்வி குழுமத்தின் தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விகாஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் வசந்த் கலந்து கொண்டார்.

கபடி போட்டியை விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகள் மற்றும் கபடி குழு வீரர்கள் உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றன. இந்த மாநில அளவிலான கபடி போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 15,000 இரண்டாம் பரிசாக ரூபாய் 12000 மூன்றாம் பரிசாக ரூபாய் 8000 4 ஆம் பரிசாக ரூபாய் 6000 ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது.

 இந்த பரிசளிப்பு விழாவிற்கு ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் சிந்துஜா மருத்துவமனை கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கபடி அணிக்கு பரிசுகள் வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *