வருகிற 07ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 09-ம்தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி திருச்சி அரியமங்கலம் SIT-ல் இருந்து தொடங்கி, காமராஜ் நகர் ராஜவீதி, G.D.நாயுடு தெரு, C.P.4, ரெயில்நகர் பஸ் ஸ்டாப், சரோஜா தியேட்டர் வழியாக பிரகாஷ் மஹால் மைதானத்தில் கொடி அணிவகுப்பு முடிவடைந்தது. இந்த கொடி அணி வகுப்பினை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பங்கேற்றார். இதில் காவல்துணை ஆணையர் தெற்கு, கூடுதல் துணை ஆணையர் (மாநகர ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்