தமிழக துணை முதலமைச்சர் மற்றும் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் மைதானத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த சிலம்பப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த போட்டியில் களாடி வரிசை, கம்பு வரிசை, தோல்வரிசை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இந்த போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
