திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் கந்தசாமி பொருளாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனுவில் திருச்சி பஞ்சபூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வணிகவளாகம் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து அப்பகுதியில் இயங்க வேண்டும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் அதேபோல புதிதாக கட்டப்பட்டு வரும் பஞ்சபூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து அங்கு கடைகள் வழங்க வேண்டும், மகளிர் சிறையை இடம் மாற்றி அந்த இடத்தில் காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
