திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள். அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரிக்கவும், சிகிச்சையளிக்கவும் மருத்துவமனை வெகு தொலைவில் இருக்கும் காரணத்தினால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே அப்பகுதியை சுற்றியுள்ள கிராம விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் துவாக்குடியிலும், நவல்பட்டு கிராமத்திலும் தலா ஒரு கால்நடை மருத்துவமனை அமைத்து தர ஆவண செய்யுமாறு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.
