எம்.ஜி.ஆரின் 36வது நினைவு நாள் அவரது சிலைக்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 36 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு, திருச்சி…

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா நிறுவனர் பேராயர் டாக்டர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை ஐசிஎப் பேராயம், சர்வ சமய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் 34 ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் விழா…

தமிழக அரசு உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் தலைவர் குமார் தலமைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் சிவராமன், பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் ஆட்சிக்குழு பொதுக்குழு…

தேசிய உழவர்கள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு கதராடை அணிவித்து வாழ்த்து சொன்ன தண்ணீர் அமைப்பினர்.

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் அருகிலுள்ள வடுகப்பட்டியில் உள்ள வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளை சந்தித்து தேசிய உழவர்கள் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் விவசாயிகளுக்கு கதராடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாத்து…

தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாரா முகமாகவே இருக்கிறார் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி:-

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்.. 2015-ல் மழை வெள்ளம் தாக்கிய போது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை பேய் மழை பெய்த போதும் தமிழ்நாட்டு…

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்மஸ் விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூய அந்திரேயா சி எஸ் ஐ ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட சிறுபான்மை அணி…

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகில் இன்று தொடங்கியது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்…

செல்போன், லேப்டாப்பில் மறைத்து கடத்திய 494 கிராம் கடத்தல் தங்கம் திருச்சி ஏர்போர்ட்டில் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது பயணி ஒருவர் தனது…

சொத்து தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை – பெண், தந்தை, மகன் உட்பட 6 பேர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்(50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் முதல் மனைவி பொன்னி. இவருக்கு யுவராஜ்(22) என்ற மகனும்…

திமுக, அதிமுக கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் – மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி பேட்டி.

நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா அரசு, இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 142 பாராளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து, இந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் திருச்சி…

ஆரிக்கலை ஓவியத்தை பாடமாக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஆரிக்கலை ஓவியர் ராஜலட்சுமி பேட்டி.

ஆரிக்கலை ஓவியம் வரைதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இது குறித்து பயிற்சியாளர் ராஜலட்சுமி கூறும் போது தான் சிறுவயது முதல் ஆரிக்கலையில் துணியில் ஓவியம் வரைதலில் ஆர்வமாக இருந்ததாகவும் தற்போது திருச்சியில் ஆரிக்கலையில் ஓவியம் வரைதல் பயிற்சி அளித்தனர்…

ஏர்போர்ட்டில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள 36 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது அவர் வயிற்றில் 20 ஓவல் வடிவ பாக்கெட்டுகள் இருந்தது எக்ஸ்ரேயில்…

திருச்சியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 19 மாணவ மாணவிகள் அரசு மருத்துவ மனையில் அனுமதி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள்…

திருச்சியில் விடிய விடிய பெய்த பனி, மழை – வாகன ஓட்டிகள் அவதி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு…

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளை குழந்தைகள் அமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த தேசிய கருத்தரங்கு.

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்பும் ஒருங்கிணைந்து “குழந்தைகள் முறைகேடு தடுப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்” எனும் தலைப்பின் கீழ் 20.12.2023 முதல் 21.12.2023 இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் முதல் நாள் பாரதிதாசன்…