தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு பொன்மலை கோட்டம் துணை பொதுச்செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ் நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த வாயில் கூட்டத்திற்கு தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு

 புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய பென்ஷன் திட்டத்தை வரவேற்றும் மேலும் வருகிற டிசம்பர் 4, 5, 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள ரயில்வே தொழிற்சங்க தேர்தல் குறித்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து விளக்கி பேசினார். இந்த வாயில் கூட்டத்தில் திமுக ரயில்வே தொழில் சங்கத்தினர் அதிமுக ரயில்வே தொழில் சங்கத்தினர் மற்றும் தென்னக ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்