நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழா திருச்சி மாவட்டம் எஸ் ஆர் எம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஷால் இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஷால் கூறியதாவது. சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல் வாதிகளாக மாறுவோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு எம்எல்ஏ விற்கு இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம். பிறகு எப்படி இவர்களால் ஓட்டுக்கு எவ்வளவு என பணம் கொடுக்க முடிகிறது. என்று நடிகர் விஷால் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்