Latest News

விவசாயிகளை பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுகிறது – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு. மனித உரிமை தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன். திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா – 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர். கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல். இதயத் துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவி அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

விவசாயிகளை பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுகிறது – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையிலும், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜன், வழக்கறிஞர் முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

மனித உரிமை தினத்தை முன்னிட்டு திருச்சி 27-வது வார்டில் நடந்த பகுதி சபா கூட்டத்தில் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர் அன்பழகன்.

திருச்சி மாநகராட்சியின் 5 -வது மண்டலத்துக்குட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல்செயிண்ட்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் , சங்கீதபுரம் , ஆட்டுமந்தை தெரு ,…

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21வது ஆண்டு பட்டமளிப்பு விழா – 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூனுஸ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின்…

கிறிஸ்தவ பறையர்களுக்கு பிரதி நிதித்துவம் அளிக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளாமை இயக்கம் வலியுறுத்தல்.

திருச்சியில் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;-தமிழக மக்கள் தொகையில் 3.4 சதவீதம் பேர் கிறிஸ்தவ பறையர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள்…

இதயத் துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவி அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய நவீன கையடக்க வாயன்ஸ் ECG கருவியின் அறிமுக நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மணிகண்டராமன் ராமபத்திரன்…

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சரின் மகன் அருண் நேரு திருச்சியில் போட்டியா???..

திமுக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மகன் அருண் நேரு. இவர் தற்போது தங்களுக்கு சொந்தமான தொழில்களை கவனித்து வருகிறார். அதே சமயம் கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.…

திருச்சி சாலை விபத்தில் திருநங்கைகள் பலி போலீஸார் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்யா(25), தமிழ் (29) ஆகிய இரு திருநங்கைகள் இன்று விடியற்காலையில் திருச்சி பழை பால்பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் தங்களின் வீட்டிற்கு வந்து கொண்டுயிருந்த…

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க கோரி தமிழர் தேசம் கட்சியினர் நூதன போராட்டம்..

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் இதுவரை திறக்கப் படவில்லை.…

அபராத வட்டியை தவிர்க்க வருமான வரியினை உரிய தவணையில் செலுத்து வேண்டும் வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி திருச்சியில் பேச்சு.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை சார்பில் வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கான வருமானவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வருமான வரித்துறை இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்…

கொள்ளிடம் தடுப்புக் கட்டையை உடைத்து ஆற்றில் விழுந்த நொறுங்கிய கார். கணவன், மனைவி பலி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் *ஆற்றின் தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்த கார்.* காரில் பயணம் செய்த கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  கேரள…

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், டைரக்டர் பாஸ்கர் இயக்கிய ‘காகித பூக்கள்’ குறும் படத்திற்கு “ராஜ்கபூர்” விருது வழங்கி பாராட்டு..

குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், திருச்சியில் எடுக்கப்பட்ட ‘காகித பூக்கள்’ குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 72.லட்சம், 1.7 கிலோ தங்கம், 24 கிலோ வெள்ளி காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

திருச்சியில் காற்று, எரிபொருள் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவர் – மாணவியர் பங்கேற்ற காற்று மாசு குறைப்பு மற்றும் சுத்தமான எரிபொருளும் அதன் பயன்களும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் இன்று ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு…

திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி – வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் FOIL, EPEE,…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை மேயர் அன்பழகன் அனுப்பி வைத்தார்.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை துரிதப்படுத்த தமிழக முதல்வர் இன்று நேரில் ஆய்வு செய்து தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக…