திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையம் முன்பாக இன்று மாலை திருச்சி புதுக்கோட்டை சாலையில் திடீர் விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் அரசு பஸ் மற்றும் கார் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார் இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் திருச்சி புதுக்கோட்டை சாலையின் குறுக்கே மாடுகள் சென்றதால் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி காரை ஓட்டி வந்த வால்மீகிநாதன் என்பவர் காரை பிரேக் பிடித்தார்.
இந்நிலையில் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மற்றும் அவருக்கு பின்னால் வந்த காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். ஏற்கனவே மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிவதாக பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது இந்நிலையில் கால்நடைகளால் கார் இருசக்கர வாகன மற்றும் அரசு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.