ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் ஆர்வமுடன் தங்களது அபாகஸ் திறமையை வெளிப்படுத்தினர் 10 நிமிடத்தில் 100 கடினமான கணித வினாவிற்கு விடையளித்தனர் இதில் சிறப்பாக செயல் பட்ட மாணவர்கள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றனர் இவ்வாறு மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திரைப்பட நடிகர் திருக்குமரன் மற்றும் அபாகஸ் பயிற்சி மையத்தின் நிறுவனர் செல்வமணி ஆகியோர் வெற்றிக். கோப்பைகளை வழங்கினார்.

இது போன்ற போட்டிகள் மாணவர்களிடம் அபாகஸ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றும் இன்றைய நவீன உலகில் மொபைல் வீடியோ கேம் என சிறிய உலகத்திற்குள் முடங்கி உள்ள மாணவர்களை அதில் இருந்து மீட்பதற்கு அபாகஸ் ஒரு வரப்பிரசாதம் என்றும் அபாகஸ் பயிற்சி மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் தேவையற்ற பயத்தை போக்கி படிப்பின் மீது ஆர்வத்தை தூண்டுவதாக அமையும் என்று ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மைய நிறுவனர் செல்வமணி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்