மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: ரெட் அலர்ட் வரும் எனக் கூறியிருந்தனர் ஆனால் வரவில்லை நான் நாகை மாவட்டம் சென்று பார்த்தேன் அங்கு 16 முகாம் அமைக்கப்பட்டு உள்ளது முகாமில் 231 தங்கி இருந்தவர்கள் அடுத்த நாளே 51 ஆக குறைந்து உள்ளனர். 10 பள்ளி கூடத்தில் முகாம் அமைக்கப் பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து உள்ளோம் தற்போது இயல்பான நிலை வந்துள்ளது. குறிப்பாக பயிர்கள் 5400 ஹெக்டேர் முழுகி இருந்தது 2 மாத பயிர்கள் பயிர்கள் என்பதால் 10 நாட்கள் வரை தாங்கும்
மழை 15 நிமிடங்கள் நின்றாள் மழை நீர் வடிந்து விடுகிறது தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே பாதிப்பு இருக்கும் இப்போது பாதிப்பு இல்லை முழுமையாக வடிந்த பின்பு பயிர்கள் சார்ந்து சேதம் இருந்தால் மாவட்ட ஆட்சியர்மூலம் கணக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வரிடம் கொண்டு சென்று நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்பள்ளிகள் பொருத்த வரை மழை பெய்யும் பகுதிகள் உள்ள மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படும் மழை நின்ற பிறகும் பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக இருந்தால் மட்டும்தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிதி நெருக்கடி இருந்த பொழுதும் அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்கினோம். அதேபோல அவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது அவர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை உள்ளது அது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம் அந்த வகையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிகம் இருக்கிறது. டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்துவோம் என்றார்