தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைக் கலைஞர்கள் கிளை முதலாம் ஆண்டு விழா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தில்லைநகர் டுலைட் நடனப் பள்ளியில் அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு விழா நடந்தது.

 விழாவிற்கு நடன அமைப்பாளர் பிரதாப் தலைமை தாங்கினார். கிளைப் பொருளாளர் சந்துரு வரவேற்றார். நூலகத்தை நிறுவனர் விமலா திறத்து வைத்தார். அந்த நிகழ்வில் த மு எ க ச மாவட்டத் தலைவர் சிவ. வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசுகையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகப் பிரியர், அவர் தன் வீட்டில் ஒரு நூலகம் வைத்திருந்தார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் போது நூலகங்கள் இருக்கும் நகரத்தையே தேர்வு செய்யும் மகத்தான தலைவராக திகழ்ந்தார். இரவு முழுவதும் யாருக்கும் எந்த வித தொந்தரவு தராமல் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டவர் . நூலகம் திறந்தவுடன் செல்லும் முதல் நபரும், நூலகம் மூடும் போது வெளி வரும் கடைசி நபராகவும் இருந்தவர் அம்பேத்கர்.எனவே அவர் பெயரில் ‘ அறிவுக் கடல் அண்ணல் அம்பேத்கர் ‘ நூலகம் ஒன்றினை தில்லைநகர் டுலைட் நடனப் பள்ளியில் அமைப்பது மிகவும் பொருத்தமானது என்று தெரிவித்தார்.

 கூட்டத்தில் நிர்வாகிகள் நிரஞ்சன்,பிரின்சி,சத்தியமூர்த்தி, ராபின்சன், திரைக் கலைஞர் சுரேந்திரன் ஜோ , சகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் கிளைச் செயலாளர் லாரன்ஸ் லூக் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *