திருச்சி மாநகர் திரௌபதி அம்மன் கோவில் தெரு, கீழ சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரி, இவரது கணவர் சீனு , இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள தொல்லியல் தொல்பொருள் துறை நுழைவு வாயிலின் இடது பக்கம் ஒதுக்கு புறமாக தள்ளு வண்டியில் பழக்கடை நடத்தி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். மேலும் தள்ளு வண்டியில் பழக்கடையை நடத்துவதற்கான அங்கீகாரத்தை திருச்சி மாநகராட்சியிடம் முறையாக அனுமதி பெற்று தொடர்ந்து கடை நடத்தி வருகிறார்கள். மேலும் பழ வகைகளின் விலை உயரும் போது குழந்தைகளின் துணிகளை வைத்து விற்பனை செய்வேன்.
இதுபோன்று சீசனுக்கு ஏற்றவாறு தொழில் செய்து எனது 5 குழந்தைகளை படிக்க வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தொடர்ந்து அப்பகுதியில் கடையை நடத்த முடியவில்லை. மேலும் அதே பகுதியில் எனது கணவர் சீனு கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நான் வழக்கமாக சென்று தள்ளுவண்டியில் பழக்கடையை நடத்தினேன் அப்போது ஒரு சிலர் என்னை அழைத்து இங்கு பழக்கடை போடக்கூடாது மீறிப்போட்டால் உன் கணவரை அடித்து துரத்தியது போன்று உன்னையும் உன் கடையையும் அடித்து உடைத்து தூக்கி எறிந்து விடுவோம் என மிரட்டினார்கள். குறிப்பாக எங்களின் மீறி இந்த பகுதியில் கடையை நடத்தினால் கொன்று விடுவேன் என தனியார் கார் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர்கள் சிலர் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
நான் முறைப்படி மாநகராட்சியில் அனுமதி பெற்று கடையை நடத்தி வருகிறேன் என தெரிவித்தும் அவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்கள் இல்லையென்றால் தினந்தோறும் எங்களுக்கு மாமுல் தரவேண்டும் எனவும் கூறுகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுக்கும் நபர்களை உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். எனது ஐந்து குழந்தைகளுடன் வாழ்வாதாரம் இல்லாமல் தள்ளுவண்டி கடையை நம்பி வாழ்க்கையை நடத்தி வருகிறேன் இந்த சூழ்நிலையில் எங்களை வியாபாரம் செய்ய விடாமல் எங்கள் வாழ்வாதாரத்தையே முற்றிலும் அளிக்கும் விதமாக இத்தகைய செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் எங்களுடைய வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கு மாநகராட்சியும் காவல்துறையும் உரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க புவனேஸ்வரி தெரிவித்தார்.