சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்து காணப்படும் திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பூர், பட்டர்பிளை பார்க் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம், உறையூர் வெக்காளியம்மன் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், நர்தஷா பள்ளிவாசல், புனித லூர்து அன்னை ஆலயம், மேலப்புதூர் மரியன்னை பேராலயம், உலக மீட்பர் பசிலிக்கா ஆலயம் உள்ளிட்ட ஏராளமான வழிப்பாட்டு தளங்கள் உள்ளன.

கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை காஞ்சிபுரம் திருநெல்வேலி கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமயச்சார்பு இன்றி அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் வந்து செல்கின்றனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள வழிபாட்டு தளங்களில் வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.

இந்த உத்தரவு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் வழிபாட்டுத் தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. முகப்பு கதவு மூடப்பட்டுள்ள நிலையிலும், ஏராளமான பக்தர்கள் முகப்பில் சூடம் ஏற்றியும், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாட்டு நடத்தி செல்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்