திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை திருச்சியில் வருவாய் மாவட்டத்தின் அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் RSD இணைந்து மாபெரும் ரத்த தான முகாம் ரத்த வங்கிகளின் உதவியோடு திருச்சி கூத்தூர் விகனேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கல்லூரி மாணவர்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெருமளவில் ரத்த தானம் வழங்கினர் – சுமார் 120 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. மற்றும் கண் தானம் குறித்து விழிப்புணர்வு “ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை எக்ஸெல் குழுமம் தலைவரும், ரோட்டரி முன்னாள் ஆளுநர் முருகானந்தம் சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்டு கொடையாளர்களை வாழ்த்தி பாராட்டினார். RBS குழுமம் தலைவர் சுப்பிரமணி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியினை திருச்சி மாவட்ட அனைத்து சங்க தலைவர் மற்றும் செயலாளர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியாக ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா நன்றியுரை கூறினார்.
RSO இயக்கம் திருச்சி பட்டர்பிளை ரோட்டரி சங்கத்தினரால் கடந்த வருடம் ஜூலை ஒன்றாம் தேதி துவக்கப்பட்டது கடந்த ஆண்டு மட்டும். 750 unit ரத்தம் தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.