உலக காது கேளாதோர் வாரவிழா செப்டம்பர் 20 முதல் 26 வரை கொண்டாடப்பட்டு வருகிறது, இதுகுறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில்..

 

தமிழகத்தில் காது கேளாதோர் விகிதம் அதிகரித்து வருகிறது பிறந்த குழந்தைகளுக்கு 1சதவீதம் முதல் 2 சதவீதமாக உள்ளது. இதற்காக குழந்தை பிறந்த உடனே screening (திரையிடல்) செய்து குறைபாட்டினை கண்டறிந்து அதற்கான அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காது கேளாதவர்களின் விகிதம் குறைக்கப்படும், காது சம்பந்தமான குறைபாட்டினை உடனே கண்டறிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு OAE, BERA, Audiometry என்ற 16 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கியுள்ளார்.. இதன் மூலம் பிறந்த குழந்தைகளின் காது கேட்கும் திறன் உடனடியாக சோதிக்கப்பட்டு அவர்களுக்கு (கோக்லியர் உள்வைப்பு) என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது கேட்கும் திறன் மற்றும் வாய் பேசும் திறன் சரி செய்யப்படும், இது மட்டுமின்றி சீழ்வடிதல் மூலமாக ஏற்படும் காது கேட்காத பிரச்சனைகளுக்கும் இந்த உபகரணங்களை உபயோகப்படுத்தி அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காது கேட்காத தன்மை தடுக்கப்படும், மேலும் வயது முதிர்ந்த காலத்தில் நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் காது கேட்காத தன்மையினையும் இந்த உபகரணம் மூலம் சரி செய்யலாம். எனவே மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இந்த அறிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்