மத மாற்ற சர்ச்சையில் கடந்த 19-ம் ஆண்டு திருபுவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், மேலக்காவேரி, திருபுவனம் மற்றும் திருமங்கலக்குடி உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தலைமையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி பீமநகர் பண்டாரி நாகபுரம் தெருவில் உள்ள அஜி முகமது உசேன் ராவுத்தர் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் ஏசி மெக்கானிக்கான அப்சல் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை ஆய்வாளர் ரஞ்சித் சிங் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த சோதனைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர் நெக்சன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கியூ பிரான்ச் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.