திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலை ப் பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிட கழகத்தின் தலைவருமான கி வீரமணி தலைமையில் நடைபெற்ற 50வது ஆண்டு பொன் விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த ஆண்டு விழாவில் பெரியார் குறித்த நாடகங்கள் மற்றும் பள்ளி வரலாறு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
*இவ்விழாவில் கி வீரமணி பேசுகையில்..,*ஊர் பெயர்கள் வைக்கும் பொழுது இனிளமான பெயர்களை வைக்காதீர்கள் கேகே நகர் டி நகர் சுருக்கமாக கூறுகின்றனர் இதில் விஷமம் இருக்கிறது.நம்முடைய முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். நூற்றாண்டு விழாவை இங்கு கொண்டு போறதுக்கு முயற்சித்தோம் ஆனால் அதிகாரிகள் அதற்கு சட்டத்தில் இடமில்லை என கூறிவிட்டனர். அப்போது திருச்சி நகராட்சியாக இருந்தது. மாண்புமிகு நூற்றாண்டு விழாவை கொண்டாடிய எம்ஜிஆர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்., நூற்றாண்டு விழாவை அரசாங்கமே கொண்டாடுகிறது. நூற்றாண்டு வளாகம் என பெயர் வைத்து எல்லா நிறுவனங்களையும் அங்கு கொண்டு வந்து. தனியாக ஒரு ஜீவோ ஒன்று போடப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டது அதனால் எம்ஜிஆருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். பெரியார் மணியம்மை பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் வேலையில் இருக்கின்றனர்.50 ஆண்டுகால வரலாற்றில் இந்த பள்ளியில் வேலை நிறுத்தம் என்று மாணவர்களும் ஆசிரியர்களோ ஈடுபட்டதே இல்லை. இந்த நிறுவனம் அனைவருக்கும் ஆனது நம்மளுடைய நிறுவனம் உங்களுடைய நிறுவனம். இந்த நிறுவனம் நூறாண்டுகள் கடந்து செல்லும் என கூறினார்.