திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து குணசீலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குணசீலன் பகுதியில் இன்று காலை முதலே மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். மேலும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை இது குறித்து ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பகலில் இல்லாத மின்சாரம் இரவு 9 மணி ஆகியும் வராததால்
ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் குணசீலம் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.