திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் ரமணிதேவி, திருச்சி சங்க தலைவர் தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியது: மகப்பேறு கால இறப்பு இந்தியாவில் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு அரசு, டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சிதான் காரணம். கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். இரவு 11 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடப்பது, மருத்துவமனை உரிமம் ரத்து செய்வதாக கூறி மிரட்டுவது, மருத்துவர்களை கொலைகாரர்கள் போல சித்தரிப்பது, நோயாளி நோய் குறித்த அறிக்கையை கிழித்து எறிதல் போன்ற செயல்பாடுகள் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இது குறித்து அரசிடம் தகவல் தெரிவிக்க இருக்கிறோம். இது போன்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை சீனியர் டாக்டர்கள் இடம் பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்து தந்த அறிக்கையின் படி ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவேண்டும். அரசும், நிர்வாகமும் மகப்பேறு மருத்துவர்கள் குறித்து ஊடகங்களில் தகவல் தெரிவிப்பது டாக்டர்களுக்கு எதிரான அணுகுமுறையை உருவாக்கும். மருத்துவமனைகளை எல்–1, எல்–2, எல்–3 என தரம் பிரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. மருத்துவர்களை தாக்கும் மனநிலை சமுதாயத்தில் மாற வேண்டும். வீட்டில் மகப்பேறு அதற்கு ஒரு குழு மற்றும் விழா நடத்தில பரிசு வழங்குவதை கடுமையாக எதிர்க்கிறோம். நோயாளிகள் குணம் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் அனைத்து மருத்துவர்களும் பணியகாற்றுகிறோம் என்றனர். நிகழ்ச்சியில் டாக்டர்க் அஷ்ரப், முகேஷ் மோகன், சுரேந்திரபாபு, சர்மிளா, உமா வேல்முருகன், ஜெயம் கண்ணன், ஜெயம் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்