சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியாளர் எஸ்.சி.அகர்வால் என்பவர், தான் சம்பாதித்த பணத்தை தனது ஓய்வு காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முடிவெடுத்து அதன்படி 1980 ஆம் ஆண்டு எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இதன் மூலம் இதுவரையில் 6500 பேருக்கு செயற்கைக்கால் வழங்குதல் உட்பட மொத்தம் ஒன்பதாயிரத்து ஐநூறு பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு உபகரணங்களையும் வழங்கியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற முகாமில் 136 பேருக்கு செயற்கை கால் அளவு எடுக்கும் பணி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பிப்ரவரி மாதம் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளையின் அடுத்த முகாம் தஞ்சாவூரில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. முகாமிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.