ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணன் வேடம் ராதை வேடம் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இதில் சிறந்த வேடமடைந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணனின் அவதாரமும் அவரின் புகழை உலகமெங்கும் பரப்புவதற்காகவும் உலகில் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருவிடவும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணனின் பெருமைகளையும் ஒவ்வொரு குழந்தைகளும் தெரிந்து கொள்ள வண்ணம் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் அணிந்து பாடல் பாடி நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமான ஸ்ரீ கிருஷ்ணன் பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை வழிபட்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.