திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த முருகன் டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்ததில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர் – மேலும் இந்த கடையுடன் தொடர்புடைய திருவானைக் கோவிலை சேர்ந்த குமார் என்பவரின் கடையில் மூன்று கிலோ புகையிலை பொருட்களும் – ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே 7 கிலோ புகையிலை பொருட்களும் இதனை தொடர்ந்து தில்லைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூட்டை மூட்டையாக சுமார் 163 கிலோ என ஒரே நாளில் மொத்தமாக சுமார் 182 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புகையிலைப் பொருட்களை கைப்பற்றியதோடு காந்தி மார்க்கெட் ஸ்ரீரங்கம் பாலக்கரை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நான்கு பேரை ஒப்படைத்தனர் – மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இவர்கள் விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.