இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒழித்து அவர்களின் உரிமைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட அறிவு சுடர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை முன்னிட்டு அண்ணாரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் வட்டாரத் தலைவர் பிரியங்கா பட்டேல், ஐ.டி. விங் மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், விஜய் பட்டேல் மற்றும் மாநில மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான காங்கிரஸார் கலந்து கொண்டனர்.