மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மதிமுக மாநில துணை பொது செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு மற்றும் நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.