பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு,
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி, சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்பி ரத்தினவேல், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன், ஆவின் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர் அரவிந்தன், அதிமுக பகுதி கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.