தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாளை ராமநாதபுரம் செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7 மணி அளவில் வந்திருந்தார் அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள காமராஜர் மன்றத்தில் நடந்த கிராம கமிட்டி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை….. யாரையோ திருப்தி படுத்துவதற்காக சீமான் பெரியாரை இழிவு படுத்தி வருகிறார். சீமான் இறந்து போனவர்களை வைத்துதான் அரசியல் செய்கிறார் முன்பு ராஜீவ் காந்தி தற்பொழுது தந்தை பெரியார் இதில் அவருக்கு என்ன மகிழ்ச்சி என்பது தெரியவில்லை அவர் அதை தவிர்ப்பது தான் அவரது இயக்கத்திற்கும் அவருக்கும் நல்லது என்றார். டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை எங்கு போய் பேசினாலும் அதனை நடைமுறைப் படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுதான் உள்ளது அதை தமிழக முதலமைச்சர் தான் எடுக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிய அரசே செய்ய முடியாது. தமிழ்நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை அவர்கள் திணிக்க முடியாது. கச்சத்தீவை பற்றி பேசும் அண்ணாமலை ஏன் அருணாச்சல பிரதேசத்தை பற்றி பேச மாட்டேன் என்கிறார். அதுவும் நம் நாட்டின் அங்கம் தானே, மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் மெரிடியன் லாங்குவேஜில் எத்தனை கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சீனா அருணாச்சல பிரதேசம், லடாக் போன்றவை எங்களுடையது என உரிமை கேட்கிறார்கள், அவர்கள் மெரிடியன் லாங்குவேஜில் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.

 இந்திரா காந்தி 4500 சதுர கிலோ மீட்டர் எடுத்து புள்ளி 75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கட்சத்தீவை மட்டுமே கொடுத்துள்ளார். இந்திரா காந்தி அச்சப்பட்டு நடுங்கி கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்தார் என அண்ணாமலை கூறுகிறார். இது எந்த மாதிரி நாகரீகமான பேச்சு. அண்ணாமலை உண்மையிலேயே வாஜ்பாயை நேசிப்பவர் என்றால் வாஜ்பாய் இந்திரா காந்தியை பார்த்து இந்த தேசத்தின் துர்கா தேவி என்றார். அண்ணாமலை துர்கா தேவியை கொச்சைப்படுத்துகிறாரா… இந்திரா காந்தியை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் கொச்சைப்படுத்தி பேசுவது அநாகரிகமாக பேசுவது நாட்டை விட்டு ஓட இருந்தார்கள் என பேசுவது அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும். இந்திரா காந்தியை பற்றி பேசும்பொழுது நாவடக்கம் வேண்டும், நாகரீகம் வேண்டும் , இதை நான் பண்பாக சொல்கிறேன் இத்துடன் அவர் இதை நிறுத்திக் கொள்வது நல்லது. விடுதலை , தியாகம், சுதந்திரம், போன்றவற்றிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆனால் இந்திராகாந்தி அப்படி அல்ல அவர் உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் அவர் அசாம் பொதுக்கூட்டத்தில் சென்று பேசியவர். இந்த வரலாறு அவருக்கு தெரியுமா… ராஜீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் கொல்லப்பட்டதில் உலக சதி உள்ளது அவருக்கு தெரியுமா , இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி எல்லாம் தியாக தீபங்கள் என்றார். இன்று வெஜ் பேங்க் என்று உள்ளது ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு அது என்னவென்று தெரியுமா… சாரா பாய் யாரு, பாபா அணுமின் நிலையத்தை யார் உருவாக்கியது, சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் இந்திராகாந்தி ராஜீவ் காந்தியை பற்றி பேசுவதற்கு இவர்கள் யார் என்றார். 15 லட்சம் தருகிறேன் 20 லட்சம் தருகிறேன் என வாக்காளர்களை ஏமாற்றி கொள்ளை புறமாக ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள் இந்திரா காந்தியையும் ராஜீவ் காந்தியையும் பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. வேங்கை வயல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்களும் கூறிக்கொண்டு வருகிறோம், அதற்கு ஒரு படி மேலே சென்று அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். காவல்துறைக்கு சில வழக்குகள் சவாலாக மாறி உள்ளது அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். வேங்கை வயல் சம்பவத்தில் யார் ஈடுபட்டார் என தெரிந்தால் சொல்லுங்கள், அரசியல் பேசுவதற்காக அநாகரிகமாக எதை வேண்டுமானாலும் பேச முடியாது .

கச்சத்தீவை எதற்காக இலங்கையிடம் தருகிறோம் இலங்கை ஒரு குட்டி தீவு அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடு கிடையாது அவர்கள் மிரட்டி பெறுவதற்கு . ஒரு நாட்டையே பிளந்து இன்னொரு தேசத்தை உருவாக்கிய தலைவர் இந்திரா காந்தி அவர்கள்.

 கச்சத்தீவை பற்றி பேசும்பொழுது இந்த நாட்டின் இறையாண்மையை பற்றி யோசித்துப் பேச வேண்டும் சில வெளியுறவு கொள்கையில் பல ரகசியங்கள் உள்ளது, அது தெரியுமா அவருக்கு அருணாச்சல பிரதேசத்திலும் லடாக்கிலும் என்ன நடக்கின்றது என பாஜக தலைவர்கள் வெள்ளை அறிக்கை கொடுக்கச் சொல்லுங்கள் அதன் பிறகு இதைப்பற்றி பேசுவோம் மெரிடியன் லாங்குவேஜில் அனைத்து கிராமங்களையும் அவர்கள் மாற்றி விட்டனர். லடாக் நம்மிடமிருந்து போய்விட்டது, அருணாச்சல பிரதேசம் முக்கால்வாசி நம்மிடமிருந்து போய்விட்டது தீனா என்றால் ஏன் நடுங்குகிறீர்கள் இதை கேட்டால் ராகுல் காந்தி வெளிநாடுகள் சென்று நம்மூர் அரசியல் பேசுகிறார் என்கின்றனர்

தமிழகத்தில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும், காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் , எந்த கட்சியில் இருந்தாலும் எவ்வளவு பெரிய மணிதராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களை தடுத்து நிறுத்துங்கள் என காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடுவதில்லை என கூறப்படுகிறதே என கேட்டபோது…… அங்குள்ள வாக்காளர்கள் பெரியாரைப் பற்றி தவறாக பேசிவிட்டு பெரியார் பிறந்த மண்ணில் அவர்கள் அமைதியாக இருப்பார்களா. அம்மாவாசைகளுக்கெல்லாம் அம்மாவாசை தான் பதில் சொல்லும் என்னை போய் கேட்கிறீர்களே என கூறிச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *