மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த தீர்மான விளக்க பொதுக் கூட்டத்திற்கு கழக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளரும், முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமை தாங்கினார், இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்பி அன்வர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் ஆவின் தலைவர் கார்த்திகேயன் மாநகராட்சி கவுன்சிலர் அரவிந்தன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசுகையில்:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் வேரூன்றி நிற்கிற மிகப்பெரிய இயக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு, புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிறகு இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக அன்பிற்கினங்க எடப்பாடி பழனிச்சாமி வந்திருக்கிறார். தற்போது தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு அரை கோடி பேர் தொண்டர்களாக இருக்கிறார்கள். இந்த இரண்டரை கோடி பேரில் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியுமா? அல்லது என் பக்கம் இருக்கிறார்கள் உன் பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? ஆனால் என்னைக் கேட்டால் சொல்ல முடியும் அதற்கு ஒரு கணக்கு இருக்கிறது அந்த கணக்கு என்ன கணக்கு என்றால் தொண்டன் எந்த பக்கம் இருப்பான் என்றால்?
எந்தப் பக்கம் கட்சி அலுவலகம் இருக்கிறதோ, எந்த பக்கம் கட்சியின் பெயர் இருக்கிறதோ, எந்த பக்கம் கட்சியின் கொடி இருக்கிறதோ, எந்த பக்கம் இரட்டை இலை சின்னம் இருக்கிறதோ, அந்தப் பக்கம்தான் தொண்டர்கள் இருப்பார்கள் இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் அவர்களிடம் இருக்கிறது எனவே தொண்டர்கள் அனைவரும் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி பக்கத்தில் இருக்கிறார்கள். ஆகவே தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.