திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம் அன்னதான சத்திரம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த் ஏற்பாட்டில் இன்று நடந்தது.தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் திறந்து வைத்து நீர்மோர், தர்ப்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதி வாணன், அவைத்தலைவர் ஐயப்பன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர் , எம்ஆர்ஆர் முஸ்தபா, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, ஞானசேகர், வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி வரகனேரி சசிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.