அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில், திருச்சி வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள கடைகள் ஹோட்டல்கள் நிறுவனங்கள் உள்ளிட்ட வியாபாரிகளுக்கு அதிமுக, கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், மகளிர் அணி செயலாளர் ஜாக்லின், பகுதி செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், ஏர்போர்ட் விஜி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.