திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயுருமான ஜெ. சீனிவாசன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
கொரோனா ஊரடங்கு,ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக மாநகர் மாவட்ட செயலாளர் இல்லாதது போன்ற காரணத்தினால் கடந்த ஐந்து வருடங்களாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைப்பு செயலாளர் தங்கமணி ஆகியோரிடம் உரிய அனுமதி பெற்று இன்று அதிமுகவினர் அனைவரையும் ஒன்று திரட்டி இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் ஜெ.சீனிவாசன்.இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல்,மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன். மாவட்ட துணை செயலாளர்கள் பத்மநாதன், வனிதா.பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா, அன்பழகன், சுரேஷ்குப்தா, நாகநாதர் பாண்டி, கலைவாணன்,பூபதி
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி நிர்வாகிகள் ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் இப்ராம்ஷா, வெல்லமண்டி கன்னியப்பன், தர்கா காஜா,கல்லுக்குழி முருகன், பொன்.அகிலாண்டம்,வசந்தம் செல்வமணி, ரவீந்திரன்,சிந்தை ராமச்சந்திரன்,இன்ஜினியர் ரமேஷ், ரோஜர்,நாட்ஸ் சொக்கலிங்கம், பாலாஜி, வரகனேரி சதீஷ்,டைமண்ட் தாமோதரன், எடத்தெரு கிருஷ்ணன் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பின் நோன்பு திறக்கும் நிகழ்வுவை நடத்திய ஜெ. சீனிவாசனை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் வெகுவாக பாராட்டி சென்றனர்.