அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியிலும் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறும்.
15.9.23, வெள்ளிக்கிழமை மாலை 6மணி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி சார்பாக ஸ்ரீ பிள்ளையார் கோவில் திடல், போசம்பட்டியிலும், 16.9.23, சனிக்கிழமை மாலை 6மணி: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புலிவலத்திலும், 17.9.23, ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி: முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக தண்டலைபுத்தூரிலும், 19.9.23, செவ்வாய்கிழமை மாலை 6மணி: துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வைரிசெட்டி பாளையத்திலும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.