மறைந்த தமிழகத்தின் முதல்வரும் ஸஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், பாரத் ரத்னா விருது பேற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சசிகுமார், இணை செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான ஜெயராமன், மாவட்ட துணைச் செயலாளர், வனிதா, மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ,
ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.