அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் உள்ள லூப்ரா பார்வையற்றோர் இல்லத்தில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அம்மா பேரவை மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர். இந்த நிகழ்வில் கவுன்சிலர் அம்பிகாபதி நிர்வாகி எனர்ஜி அப்துல் ரகுமான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்..