அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டம் அம்மா பேரவை சார்பில்
திருச்சி உறையூர் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் அம்மா பேரவை மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சியும் , அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் வனிதா, எனர்ஜி அப்துல் ரகுமான், பூபதி வழக்கறிஞர் மாவட்ட தலைவர் வரகனேரி சசிகுமார் மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.