கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி சமூக வலைதளத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா குறித்து திமுக கழகப் பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாக பேசியதை கண்டித்து
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மாநகராட்சி மக்கள் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஒத்தக்கடை செந்தில் தலைமையில்
திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ரபிக் , அம்மா பேரவை ராம்குமார் , சமுத்திரம், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.