திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தேசிய மருத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்பி செல்வம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது,
அந்த மனுவில் திருவளர்ச்சோலை இரண்டாவது பிரதான சாலையிலிருந்து கீழே தெரு வழியாக மாதா கோவில் தெரு வரை செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மற்றும் நடு கொண்டையாம் பேட்டையில் இயங்கி வரும் கொள்ளிட கரையில் உள்ள அனுமதி இல்லாமல் மணல் குவாரி நடத்தி வருவதை தடுக்க கோரியும்,மேலும் அப்பகுதி உள்ள சாலைகளை விரிவுபடுத்தவும் தனிநபர் ஆக்கிரமைப்புகளை அகற்றவும் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்கால் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமங்களை அகற்றி தூர்வாரி காவேரி ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை விவசாய நிலத்திற்கு செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்,