அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவி தமிழரசன் சிறப்புரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:- ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், மகளிர் மேம்பாடு மற்றும் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சாலை ஓரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடைபாதை கடைகள் மற்றும் சிறு வியாபாரிகளின் நலனுக்காகவும், முடி திருத்தும் தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் தையல் கலைஞர்கள் கட்டிட வேலை செய்பவர்கள் கைவினை தொழிலாளர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் ஏனைய தொழில் புரிவோர்களின் உரிமையை மீட்டுக் கொடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்று தரவும்,
அதேபோல் இந்திய சுதந்திரம் பெறுவதற்கு 28 முறை சிலை சென்ற சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் எஸ் விஸ்வநாத தாஸ் அவர்களுக்கு சென்னையில் பிரதான சாலையில் முழு உருவ சிலை அமைக்கவும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மருத்துவர் வண்ணார் குயவர் குலாலர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடாக 5% வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.