அனைத்து வேளாளர், வெள்ளாளர்கள் உட்பிரிவு சங்கங்கள் மற்றும் வ.உ.சி பேரவைகளின் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நலச்சங்கம் சார்பாக நடைபெற இருக்கும் வேளாளர் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மேலும் 17.08.25 அன்று 42 வேளாளர் அமைப்பு ஒன்று கூடி மாநாடு நடைபெற உள்ளது. சமுதாயம் மேம்படவும் பல்வேறு பணிகள், வேளாளர் நாகரீகம் மீண்டும் தலை தூக்க ஒன்றுபட வேண்டும். மேலும் நிர்வாகிகள் செல்வராஜ், தேவராஜ், ஆகிய முன்னிலையில் மாநாடு நடைபெறும் நிலையில் எந்த நிலைப்பாடாக இருந்தாலும் அரசியல், ஆன்மீகம் அனைத்திற்கும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். சைவ வேளாளர் சமுதாயத்திற்கு வேண்டிய அனைத்து சலுகைகளையும் எதுவாக இருந்தாலும் அரசு வழங்க வேண்டும்.

வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட தயாராக உள்ளோம். தேர்தல் தொடர்பாக கூட்டணி குறித்து மாநாட்டில் முடிவெடுக்கப்படும். 42 அமைப்புகளும் இணைந்து ஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாளர் பண்பாட்டு நலச் சங்கம் என துவக்கப்பட்டுள்ளது. எல்லா வேளாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. கவுண்டர், முதலியார் உட்பட அனைத்து அனைத்து உட்பிரிவையும், அனைத்து வெள்ளாளரையும் சேர்த்து வேளாளர் என்று ஒரே இனமாக ஒரே பேரில் அரசாணை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் கோவை செல்வராஜன், பொருளாளர் தனவேல், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *