ஏப்ரல் 04 இன்றைய தினம் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FLA/FL2/FL3/FL3A/FL3AA & FL 11 அனைத்தும் மூடப்படும் எனவும், மேலும்
அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA & FL11 வரையிலான ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்., அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவை காற்றில் பறக்கவிடும் விதமாக திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் வைத்து மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் தனியார் அமரர் ஊர்தியில் மறைத்து வைத்து விற்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் மேலும் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.