ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களையே, இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வந்தோம். இவற்றில், தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கைகள் இருந்து வந்தன. பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்ற பின், குற்றவியல் சட்டங்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. பல்வேறு துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலும் பெற்றன.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தை கண்டித்து நேற்று முதல் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருச்சியில் நேற்று வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல இன்று திருச்சியில் நீதி மன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மோடி அரசுக்கு எதிராகவும் , 3 சட்டத்தையும் திரும்ப பெற வேண்டியும் கோசங்களை எழுப்பினர் இதில் 100 க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்