சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், நேற்று பாராளுமன்ற போராட்டத்தின் போது பிஜேபி எம்.பி-ஐ ராகுல் காந்தி தாக்கியதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மீது வழக்கு பதிய பட்டதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இன்று இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் அதே போல திருச்சி ஜங்ஷன் ராயில் நிலையம் முன்பு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதில் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அமித்ஷா பதவி விலக வேண்டும், ராகுல் காந்தி மீது போடப்பட்ட போய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கோசங்களி எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ், கலை, மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டெல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 100 – க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்