தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கணக்காளர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான கலந்தாய் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரவி சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம் ,மதுரை, கடலூர் , நாகப்பட்டினம், திருவள்ளூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாநில தலைவர் சார்லஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் 12525 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன இதில் கிராம வறுமை ஒழிப்பு கணக்காளர்கள் சுழற்சி முறையில் கடந்த 2006 முதல் பணி செய்து கொண்டிருக்கும் மேற்கண்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், மேலும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்,
தற்பொழுது இவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் வசூல் செய்யும் நபர்களாக இருந்து வருகின்றனர் அதன் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை தலா 3000 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது இது தவிர மாநில அரசால் சென்சஸ் என்று சொல்லப்படும் கணக்கெடுப்பிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் இவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத நிலையில் தமிழக அரசு இவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். மேலும் வருகிற ஜனவரி பிப்ரவரி மாதத்தில் அமைச்சர் உதயநிதியிடம் அனுமதி கேட்டு அவர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு நடத்துவது என தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.